வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயலில் சென்னையில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் துவக்கத்தில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து பின்னர் வேகம் குறைந்து மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
நாளை பிற்பகலில் கரையை கடக்கவிருந்த கஜா புயல் நாளை மாலை பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குசெல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.