கஜா புயல் எச்சரிக்கையால், குமரி மாவட்ட மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தையொட்டியுள்ள கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, குமரி மாவட்ட மீனவர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் உள்ள கடற்கரை கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.