நவம்பர் 15 ஆம் தேதி, நாகப்பட்டினம் – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 15 ஆம் தேதி அன்று, நாகப்பட்டினம் – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாகைக்கு வடகிழக்கே கஜா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், நாகப்பட்டினம் – சென்னை இடையே 15 ஆம் தேதி அன்று கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

கஜா புயல் காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை,மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரெட் அலர்ட் என்பது பொதுமக்களுக்கானது அல்ல என்றும் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்காக தரப்படும் எச்சரிக்கை என்று பாலசந்திரன் விளக்கம் அளித்தார்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடல் சீற்றம் காரணமாக கடல்நீர்மட்டத்தின் அளவு ஒரு மீட்டர் அளவு வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 

Exit mobile version