இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட் – 11 செயற்கைகோள்

 

இணையதள வேகத்தை அதிகரிக்கும் ஜிசாட்-11 செயற்கைகோள்
பிரான்சில் இருந்து நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ஜிசாட் – 11 செயற்கைகோளை கடந்த மே மாதமே விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிசாட்-11 செயற்கைகோளின் தயாரிப்புப்பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. 5 ஆயிரத்தி 854 எடையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள், கட்டுப்பாட்டை இழந்து விலகி சென்றது. இதையடுத்து ஜிசாட்-11 செயற்கைகோளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 2 முதல் 3.30 மணிக்குள் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைகோளில் 40 அதிநவீன டிரான்ஸ்பான்டர்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் இணையதள வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version