இந்திய அணியின் எதிர்கால வீரர்கள் கிராமங்களில் இருந்தே உருவாக போவதாக என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கட்டுவேப்பிலைப்பட்டியில், சேலம் கிரிக்கெட் பவுன்டேஷனால், 16 ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிலையில், இன்று நடைபெற்ற விழாவில், கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அப்போது, விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் பேசுகையில், சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இந்திய அணியின் எதிர்கால வீரர்கள் கிராமங்களில் இருந்தே உருவாக போவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், சேலம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என கூறினார். விழாவின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மைதானத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். ராகுல் டிராவிட் பந்துவீச, முதலமைச்சர் பேட்டிங் செய்தார்.