U14 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த பிரபல வீரரின் மகன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டின் மகன் சமித், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில், துணைத் தலைவர் அணியும், தார்வாடு அணியும் மோதின. இதில் துணைத் தலைவர் அணி சார்பில் விளையாடிய சமித், முதல் இன்னிங்சில் 256 பந்துகளை எதிர்கொண்டு 201 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 94 ரன்களை எடுத்த அவர், அப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

Exit mobile version