ஒரே ஆண்டில் நான்கு முறை கடன்கள் மீதான வட்டிகளை குறைத்துள்ள ரிசர்வ் வங்கி, மேலும் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தற்போதைய வளர்ச்சி விகிதம் சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை ஓராண்டுக்கும் மேலாக நீடிக்க உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் நான்கு முறை ரெப்போ வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.