கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்துசெய்யப்போவதாக, தேர்தலின்போது பொய் பிரசாரம் செய்த ஸ்டாலின், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் கோவை மாநகராட்சி மூலம் கோவை மக்களுக்கு தடையின்றி 24 மணிநேரமும் குடிநீர் வழங்குவதற்காகவும், சீரான குடிநீர் விநியோகத்திற்க்காகவும் சூயஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப குடிநீர் கட்டணம் செலுத்தும் விதமாக மீட்டர் பொருத்தப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தை திசைதிருப்பும் விதமாக, அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், கோவை மாநகராட்சியின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்த்து விட்டதாகவும், இதன் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்ததாகவும், கம்பி கட்டும் கதைகளை சொல்லி பொய் பிரசாரம் மேற்கொண்டார்.
இனிமேல் குடிநீர் விநியோகத்தின் முழு உரிமையும் சூயஸ் நிறுவனத்திடம் சென்றுவிடும் என்றும், குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனமே நிர்ணயிக்கும் என்றும், கற்பனை கதைகளை பிரசாரத்தில் அளந்து விட்டார்.
இது மட்டுமில்லாமல், திமுக ஆட்சிக்கு வந்ததும் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என வழக்கம்போல பொய் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இதையெல்லாம் நம்பாத கோவை மக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை அதிமுகவிற்கு பரிசாக அளித்தனர்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாநகராட்சியில் குடிநீர் பராமரிப்பிற்காக சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர முதலமைச்சர் அனுமதித்துள்ளதாகவும், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற பொய் பிரசாரங்களால் ஏற்கனவே சாயம் வெளுத்துள்ள திமுக அரசு, சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என அறிவித்துள்ளது.
இதன் மூலம் பொய் வாக்குறுதிக்கு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கிறது திமுக என அவப்பெயரை சம்பாதித்துள்ளது.