கொரோனா வைரஸ் தாக்கியது போல் நடித்த இளைஞரால் பரபரப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வந்தது போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய இளைஞர் ஒருவருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

மாஸ்கோ சுரங்க ரயிலில் ஏறிய இளைஞர் ஒருவர்  முகக்கவசம் அணிந்து கொண்டு ஏறினார். திடீரென்று சுருண்டு விழுந்த அவர் கடுமையான வலியுடன் துடித்த அவரைக் காப்பாற்ற பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆனால் திடீரென்று எழுந்து கொண்ட அந்த இளைஞர் கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் என கத்தியவாறே அங்கிருந்து மாயமாகியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள், முட்டி மோதி, அந்த ரயிலில் இருந்து வெளியேற போராடியுள்ளனர். இந்த திடீர் நெரிசலில் சிக்கி பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில்  இந்த முழு சம்பவமும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனால் இந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த இளைஞருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version