செண்பகத்தோப்பு அணையின் மதகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணையின் மதகுகளை சீரமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதையடுத்து, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், சென்னை பசுமைவழிச்சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மதகுகளை சீரமைக்க 16 கோடியே 37 லட்ச ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.