படகு விபத்தில் உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-முதலமைச்சர் உத்தரவு

மீன்பிடி தொழிலின்போது படகு விபத்தில் உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்டம் செருதூரைச் சேர்ந்த செல்வமணி, வடக்குப் பொய்கை நல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சிந்தாஸ், மினோன், குமரி மாவட்டம் கொல்லங்கோடு சகாயம், லூர்துராஜ், ஏழுதேசம் அருளிஸ் ஆகிய மீனவர்கள் மீன்பிடி தொழிலின்போது கடலில் தவறிவிழுந்து உயிரிழந்ததைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த மீனவர்கள் 7பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version