அரசுப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் ஏற்படுத்த சுமார் 37 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அதில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளைக் கொண்டு இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், விருப்பமுள்ள ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர்களாக நிகமிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இலக்கியப்பிரிவு, கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு ஆகியவற்றை விரைவாக ஏற்படுத்தி, நல்லொழுக்கம், கல்வி இணைசார் செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளை வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 37 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

Exit mobile version