15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு நிதி!

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில், தமிழகத்திற்கு 901 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி, 28 மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான முதல் தவணையாக 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு 901 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 ஆயிரதது 438 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆயிரத்து 456 கோடி ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு ஆயிரத்து 254 கோடியே 50 லட்சம் ரூபாயும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஆயிரதது 103 கோடி ரூபாயும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version