ஜெர்மனியில் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு!

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருவதால், அங்கு மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்த ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், முழு ஊரடங்கை கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version