சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு!

சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.  சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில், காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இதேபோன்று, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக காலை 6 மணி முதல் 28ம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. ஐந்து மாநகராட்சிகளை தவிர, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் இன்று  முதல் 29ம் தேதி வரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதுதவிர கடலூர், தென்காசி, திருவாரூர், நாகை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன. ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சி, அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவையும் செயல்படும். உணவகங்களுக்கு தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து, உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Exit mobile version