தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தேனி மாவட்டம் கம்பத்தில் சுமார் 200க்கும் அதிகமானார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை கம்பம் நகராட்சி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் தவிர்த்து மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம்,போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து கம்பம் நகராட்சியில் முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.