தமிழ்நாட்டில் 24ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது, மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரமுடியாத தமிழக அரசு, தற்போது தளர்வுகள் இல்லாமல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி 24ம் தேதி திங்கட்கிழமை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப் போன்று திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.