டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறையாததை அடுத்து மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 26ம் தேதி முதல் இரு முறை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதும், கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 285 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாயிரத்து,105 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு குறையாததை அடுத்து மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே, முழு ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Exit mobile version