கொரோனா பரவலை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல் – முதலமைச்சர்

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 270 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என். ரவி மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடவடிக்கையால், தமிழகத்தில் 54 சதவீதம் பேர் குணமடைந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Exit mobile version