மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்தழைப்பு அளிக்க இருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வருத்தம் அளிப்பதாக கூறிய ஐஐடி நிர்வாகம், இதுதொடர்பாக தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை ஐஐடி நிர்வாகம் சார்பில் முழு ஒத்தழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.