15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து நாகலாந்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அதிகாரி தலைமையில் ராணுவ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை பழங்குடி சமூகத்தை சேர்ந்த நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நிகழ்விடத்திலேயே 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்தது.
படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீதான தாக்குதலால் கொந்தளித்த பொதுமக்கள், மோன் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். பதற்றத்தை தணிக்க 6 மணிநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மோன் மாவட்டம் முழுவதும் இன்று144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்கள் மீதான தாக்குலை கண்டித்து நாகலாந்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ, மோன் மாவட்டத்துக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். பின்னர் பேசிய அவர், நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுத பாதுகாப்பு சி இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவும் மோன் மாவட்டத்துக்கு செல்ல உள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாகாலாந்து மாநில அரசு ஏற்கனவே விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இதனிடையே 14 பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவ வீரர்கள் மீது நாகாலாந்து காவல்துறையினர் தாமாக முன்வந்து கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அதிகாரி தலைமையில் ராணுவ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.