பெட்ரோல் டீசல் விலை வழக்கம் போல் இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், சரக்கு வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், விலையும் ஏறுமுகத்திலேயே இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து, 98 ரூபாய் 14 காசுகளாக உள்ளது. இதேபோன்று டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 31 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சரக்கு வாகன உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவரும் நிலையில், ஸ்டாலின் உறுதியளித்தது போல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு ஏதும் இல்லாததும், வாகன ஓட்டிகளை கடும் அவதிக்கு உட்படுத்தியுள்ளது.