இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக அவற்றின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.73.87 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேபோல டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.97 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Exit mobile version