"ஒற்றுமையாக இருந்து புரட்சித் தலைவியின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம்"

அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதை, சட்டப்பேரவை தேர்தல் வாயிலாக வெளிப்படுத்துவோம் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமானோர் குவிந்துள்ளால், தலைமை கழகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. முதலாவதாக கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம், ஒருங்கிணைந்த நேர்காணல் நடைபெற்றது. அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால், ஒருங்கிணைந்த நேர்காணல் நடத்தும் சூழ்நிலை உருவாகி விட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்று, அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை என்பதை வெளிப்படுத்துவோம் என்று உறுதியாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் குறையின்றி நிறைவேற்றியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று பாராட்டு தெரிவித்தார். விருப்ப மனு அளித்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடும் தகுதி இருப்பதாக தெரிவித்த அவர், அமோக வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று உற்சாகமூட்டினார்.

 

Exit mobile version