திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய வழித்தட பேருந்துகள் தொடக்கம்

தமிழக மக்களின் நலன் கருதி தமிழக அரசானது பல்வேறு புதிய பேருந்து நிலையங்களுடன், புதிய வழித்தடங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய வழித்தட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, மதுரையில் இருந்து நெல்லை வழியாக திருப்பூர் செல்லும் மூன்று பேருந்துகளும், மதுரையில் இருந்து திருச்செந்தூர் மார்க்கமாக ஒரு பேருந்தும், மதுரையில் இருந்து கடலாடி வழியாக கோவை செல்லக்கூடிய ஒரு பேருந்தும் இயக்கப்பட்ட உள்ளது.

மொத்தம் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வழித்தட பேருந்துகள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார், பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த 2018 -19 ஆம் ஆண்டுகளில், ஏற்கனவே புதியதாக 31 வழித்தட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version