பொங்கல் பண்டிகையிலிருந்து மாவட்டம் தோறும் மண்ணின் கலை என்ற பண்பாட்டு கலை விழா நடத்தப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்து 400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நடன நிகழ்ச்சி ‘சென்னையில் ஒயிலாட்டம்’ என்ற பெயரில் திருநின்றவூரில் நடைபெற்றது. இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 4 வயது முதல் 55 வயது வரை உள்ள ஒயிலாட்ட கலைஞர்கள் தமிழகம் மட்டுமின்றி மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டு நடனமாடினர்.
இது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.