ஆழியாறு அணையிலிருந்து 5 பழைய வாய்க்கால்களின் மூலம் தண்ணீர் திறக்க உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசன வசதிக்காக, ஆழியாறில், 5 பழைய வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க, ஆழியாறு பழைய ஆய்க்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறில், 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனத்திற்காக ஆகஸ்ட் 18ந் தேதி முதல் டிசம்பர் 31ந் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த உத்தரவால் 6 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாயி நிலங்கள் பாசன வசதி பெறும்.

Exit mobile version