மேட்டுபாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில்

கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை மேட்டுபாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை சீசனை அனுபவிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவது வழக்கம். இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், வரும் கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version