கர்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிக அளவில் உள்ளதால் தமிழகத்தில் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் வெங்காயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிப் போயின. இதன் எதிரொலியாக வெங்காய விளைச்சல், வரத்து பாதிக்கப்பட்டதால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெங்காயம் விலை ஒரு கிலோவுக்கு எண்பது ரூபாய் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. கோவையில் உள்ள எம்ஜிஆர் சந்தைக்குக் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் விலை ஏற்றத்துக்கு வாய்ப்பில்லை எனவும், படிப்படியாக வெங்காயம் விலை குறையும் என்றும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.