ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரயில் இன்று காலை சென்னை புறப்படுகிறது.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இதற்கான பணிகள் இரவு, பகலாக நடைபெற்றது. பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 50 வேகன்களில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது. தண்ணீர் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையில், ரயில் இன்று புறப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கொடியசைத்து ரெயிலை தொடங்கி வைக்கிறார். மதியம் 1 மணிக்கு ரெயில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தை சென்றடையும். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க உள்ளனர்.
Discussion about this post