தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும் எனக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதியைப் போன்று மதுரை மீனட்சி அம்மன் கோவிலிலும் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்கக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் நடை திறக்கப்படும் நேரத்திலிருந்து இரவு நடை சாத்தப்படும் வரை வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. லட்டு தயாரிப்புக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. லட்டுக்கான செலவுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்றுள்ளது. பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை, ஆன்மீக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.