காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஏற்படாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார்.இதனிடையே தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை தங்களது கட்சிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.