இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி

மத்திய அரசின் கிஷான் ரயில் திட்டம் மூலம் , இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த கட்டணத்தில் எளிதாக கொண்டு செல்ல வசதியாக கிஷான் ரயில் திட்டம், நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 
இந்த நிலையில் ஆந்திராவின் வறட்சியான மாவட்டமான ஆனந்தபுரத்தில் உள்ள தாடி பத்திரி ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவிலேயே முதல் முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய கண்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு 839 டன் வாழைப்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  சிறப்பு ரயில் மூலம், குளிர்சாதன வசதியுடன் கூடிய கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட வாழைப்பழங்கள், மும்பை துறைமுகத்திருந்து, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Exit mobile version