ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் செக்டார் 85 க்கு அருகில் கோத்ரேஜ் நிறுவனம் கட்டியுள்ள அடுக்ககங்களில் இருக்கும் காற்று சாதாரண வெளி இயற்கைச்சூழலை விட 10 மடங்கு அதிகமான தூய்மையுடையது என்கிறது கோத்ரேஜ் நிறுவனம்.
கோத்ரேஜ் நிறுவன அறிக்கையின்படி, வெளியிலிருக்கும் சூழலுக்கும் அடுக்கக பகுதியின் சூழலுக்கும் இடையிலான காற்றின் மாசுபடுத்தும் துகள்கள் அளவு கனமீட்டர்க்கு 209 மைக்ரோ கிராமாம்.
அதாவது, வெளியில் இருக்கும் நுண்துகள்கள் கனமீட்டர்க்கு 287 மைக்ரோ கிராம். அதே இடத்திலிருக்கும் அடுக்ககத்தில் வெறும் கனமீட்டர்க்கு 18 மைக்ரோ கிராம்தானாம்.
அப்படியென்றால் இது எப்படி சாத்தியம். இயற்கையை கட்டுப்படுத்தி வேண்டியதைப் பெறுமளவுக்கு மனிதன் முன்னேறி விட்டானா?
ஒருவேளை ஆம் என்றால் எப்படி செயல்படுகிறது இந்த ”க்ளீன் ஏர் பிராஜக்ட் ” .
மையமாக நிறுவப்பட்டுள்ள காற்று சுத்திகரிப்பு முறைமை ஒன்று தேங்கியுள்ள காற்றை நிறுத்திக்கொண்டு, காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் 2.5 மைக்ரோ துகள்களை வெளிவிடாமல் வடிகட்டுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அபாயகரமான சில பாக்டீரியாக்களையும் பல்க அனுமதிப்பதில்லையாம்.
ஏற்கனவே இருக்கும் காற்று சுத்திகரிப்பான்களுடன், ஆக்ஸிஜன் வழங்கும் மூலிகை செடிகளையும் முழுக்க மரங்களையும் நட்டு ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துவோம் என்றும், மக்களின் நலன் மற்றும் இந்தத் துணைநகரத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை கருத்தில் கொண்டு இதை செய்தோம் என்றும் தெரிவிக்கிறார் .
பிரீத் ஈஸி என்கிற நிறுவனம்தான் இந்த காற்று சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஐரோப்பா முழுக்க பரவியிருக்கும் தொழில்நுட்பம்தான் இது. இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது என்கிறார் பிரீத் ஈஸி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பருண் அகர்வால்.
அதே பகுதிகளில் இப்படி சுத்தமான காற்று உள்ளதாக விளம்பரம் செய்யப்படு விற்கப்படும் வீடுகள் ஏறக்குறைய 65.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இங்கு குறைந்தபட்சம் 73 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
போதுமென்கிற அளவுக்கு அறிவியலாலேயே மாசுபடுத்திவிட்டு இப்போது அறிவியலாலேயே அதற்கும் விடை கண்டுபிடிக்கிறோம். அந்த காற்று சுத்திகரிப்பானுக்குள் சிறைபிடிக்கப்படும் விஷ, கார்பன டை ஆக்ஸைடு மற்றும் அபாய நுண்துகள்கள் எல்லாம் எப்படி வெளியேறும் ஒருவேளை வெளியேறினால் என்ன ஆகும் என்பதையும் அறிந்து கொண்டு இது போன்ற இயற்கை முரண்களை இனிதே வரவேற்போம்.