ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 12 வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன்

ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரியாவின் டோம்னிக் தீமை வீழ்த்திய ரஃபேல் நடால் 12 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பாரீஸில் நடந்து வரும் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் உலகின் 2 ஆம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான ரஃபேல் நடால், 4 ஆம் நிலை வீரரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவருமான டோம்னிக் தீமை எதிர்கொண்டார். டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் முதல் சுற்றை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த சுற்றை 7-5 என தீம் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த 3 வது மற்றும் 4 வது செட்டை 6-1, 6-1 என எளிதில் கைப்பற்றிய நடால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சுமார் 3 மணி நேரம் நடந்த இப்போட்டியில் சாம்பியன் கோப்பையை தொடர்ந்து 3 வது முறையாகவும், ஒட்டு மொத்தத்தில் 12 வது முறையாகவும் நடால் கைப்பற்றி அசத்தினார்.

Exit mobile version