உதகையில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். உறைபனி காரணமாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைகுந்தா, HPF மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் புல்வெளிகள் மீது வெண்கம்பளம் போர்த்தியது போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
மேலும், காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால், தேயிலை செடிகள் கருகி மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.