மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே விலையில்லா பொருட்கள் – அமைச்சர் சி.வி. சண்முகம்

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே தமிழக அரசு அவர்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில், கல்வித்துறை சார்பில் 16 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 55 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருவதாக தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திட்டம் தீட்டியதாக கூறிய அவர், அமெரிக்காவில் கூட மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.

முழுமையாக வரிவிலக்கு பெற்றவர்கள், மாணவர்களின் இலவசங்களை கேலி செய்வதாகவும் அவர் கண்டனம்தெரிவித்தார்.தமிழகத்தில் உயர்நிலைக் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.

 

Exit mobile version