கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இலவச வைஃபை வசதி

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு திறக்கப்பட்டுள்ள தங்க மரத்தில், இலவச வை ஃபை வசதி செய்யப்பட்டுள்ளதால், மிகுந்த பலன் அடைந்து வருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், கோவையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அங்கு செயற்கை முறையில் தங்க மரம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் இலவச வை ஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க மரம் இருக்கும் பகுதியில், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் அமர்ந்து, இணையதள பயன்பாட்டை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினந்தோறும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து வை ஃபை வசதியை தங்களது கல்விக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வசதி மூலம், தங்களது கல்வி தொடர்பான பல்வேறு பணிகளை இலவசமாக மேற்கொள்ள முடிவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version