நீட் தேர்வு எழுதுவோருக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது.
நீட் தேர்விற்கு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது. இந்த பயிற்சி மையங்களில் இன்று முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவத்தின் தொழில் நுட்ப உதவியுடன் அரசு ஆசிரியர்களைக் கொண்டு நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கு இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வார இறுதி நாட்களிலும் பயிற்சிகள் நடக்கும் எனவும், காலை 9.30 முதல் 12.40 வரையிலும், பிற்பகலில் 1.10 முதல் 4.20 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு நீட் மற்றும் JEE பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.