தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் நீரோஃபைப்ரோமா நோயை 100 சதவீதம் குணமடைய செய்து மருத்துவர்கள் சாதரனைப்படைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தை சேர்ந்த மாணவி திவ்யபாரதி நீரோஃபைப்ரோமா என்னும் நார்க்கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழே செயலிழந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முடநீக்கியல் துறையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய்க்கு தீர்வு காணப்பட்டு இருந்தாலும், முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.