நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தேசிய விதை கழகம் மூலம் உளுந்து விதை இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கஜா புயலால் நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய விதை கழகம் சார்பில் நாகை மாவட்டம் கள்ளிமேடு கிராம விவசாயிகளுக்கு, உளுந்து விதை இலவசமாக வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 விவசாயிகளுக்கு சென்னை தேசிய விதை கழகம் மூலம் தலா 5 கிலோ விதை உளுந்து வழங்கப்பட்டது. இந்த விதை உளுந்தை விதைத்து பயிர் செய்தால் அதிக மகசூல் பெறமுடியும் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.