ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்திற்கும் ரேஷன் பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் விலையின்றி பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை பெற, வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஜூலை 10ம் தேதி முதல் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் மக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.