இப்போதெல்லாம் செல்போன் நம்முடன் இணைந்த பாகமாகவே மாறிவிட்டது. எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் செல்போன் உபயோகிக்காமல் நாம் அதனை செய்து முடிப்பதில்லை.
அதிலும் சாப்பிடும் போது செல்போன் உபயோகிப்பதை கண்டால் நிறைய பேருக்கு பயங்கர கோபம் வரும். அப்படியான செல்போனை உபயோக்கிக்காமல் எனது கடைகளில் வந்து சாப்பிடுவோருக்கு பீட்சா இலவசம் என அறிவித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பீட்சா கடை உரிமையாளர்.
கலிபோர்னியாவை சார்ந்த அந்த கடையில் சாப்பிட வருவோர் அங்குள்ள லாக்கரில் வைத்து போனை விட்டு சாப்பிட்டால் இலவசமாக வழங்கப்படுகிறது பீட்சா.
இதுகுறித்து அந்த உணவக அதிகாரிகள் கூறும் போது, அனைவரும் மனநிறைவாக சாப்பிட வேண்டும்…நேரடி கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.