பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்!

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கம் சமூக பரவலாக இல்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதிகளை பரப்ப வேண்டாம் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆவடியில், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பொது மக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடியை வழங்கினார். தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதிகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version