மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, துரைகண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று 126 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மணமக்களுக்கு அரை சவரன் தாலி, பீரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர்கள் பரசுராமன், பாரதிமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர், கோவிந்தராஜன், ராமஜெயலிங்கம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.