ஈரோடு மாவட்டத்தில் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை

ஈரோடு மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழக அரசு இலவச வீட்டுமனை வழங்கியது.

இந்நிலையில் இலவச வீட்டுமனை இடங்களில், குடிசைகள் அமைத்து வசித்து வந்த பயனாளிகளுக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டப்பட்டு பணியை நிறைவு செய்தனர். பல ஆண்டுகளாக வீடுகள் இன்றி, குடிசையில் வசித்து வந்த நிலையில், அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்த அரசிற்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version