இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி- அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 91 ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

சுண்டக்காமுத்தூர் கரடிமடை மற்றும் வஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எழுபது ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் இருந்த மக்களுக்கு அதிமுக அரசின் முயற்சியில் பட்டா வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல வேடப்பட்டி பகுதியில் பட்டா கொடுக்க பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version