தமிழக அரசின் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச பட்டாக்களை மாவட்ட துணை ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கினார்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட எள்ளுப்பாறை கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களை அளந்து மதிப்பிடும் பணி கடந்த 20 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் முறையாக வரி செலுத்தி வந்திருத்தால் அவர்களுக்கு அந்த இடத்தினை வழங்கவும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிடவும், மற்றும் விவசாயம் செய்து வந்திருந்தால் அந்த விவசாயிற்கே அந்த இடத்தை வழங்கிடவும் அரசு ஆணை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் இளம்பக்வத் அங்குள்ள 17 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார்.

Exit mobile version