விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார். மேலும் உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக அரசு திறந்த மனதோடு இருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.