திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் மறு சுழற்சி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் முயற்சியாக பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் சேறும் பிளாசஸ்டிக் பாட்டில்,பிரஷ்,பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவந்து கொடுத்தால் பிளாஸ்டிக்குக்கு இணையாக மாணவர்களுக்கு நோட்டு,புத்தகங்கள்,பென்சில்,பேனா போன்றவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்…
மேலும் அதிகப்படியான பிளாடிக் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக எலக்ரிக் சைக்கிள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரியான இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள் …